பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களில் 73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய் அல்லது குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.
இது குறித்து அரச, தனியார், வைத்தியசாலைகளுக்கும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளார்.






