LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

வடக்கு மக்களுக்கு செய்தது என்னவென்று கூறமுடியுமா – மஹிந்த அணி கேள்வி!

வடக்கு மக்களுக்கு செய்தது
என்னவென கூறமுடியுமா என அரசாங்கத்திடம் எதிர்கட்சி கோரியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கில் கைத்தொழில் துறையும் கூட்டுறவுத்துறையும் பலம்பெற்றிருந்தது. அங்கு கண்ணாடித் தொழிற்சாலைகூட இயங்கியது.

ஏனைய தொழிற்சாலைகள் இயங்கின. ஆனால் நல்லாட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கில் ஒரு கைத்தொழில் பேட்டையாவது உருவாக்கப்பட்டுள்ளதா?

தமிழ் மக்களுக்காக இந்த அரசாங்கம் ஏதேனும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதா? அரசாங்கம் என்ற வகையில் அங்கு நீங்கள் செய்தது என்ன என்பதனைக்கூற முடியுமா? இன்று வீடு வீடாகச் சென்று கடன் கொடுக்கின்றனர்.

இதில் மத்திய வங்கி தலையிட்டுள்ளதா? வெறுமனே மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றது. இவை குறித்து அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்க்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7