LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

புல்வாமா தாக்குதலை பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதி கைது

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதி சஜ்ஜத் கானை டெல்லி சிறப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இவர் நேற்று (வியாழக்கிழமை) டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி முடாசீர் என்பவரை இம்மாத ஆரம்பத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7