LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயற்பட சமூக வலைத்தளங்கள் ஒப்புதல்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் எவ்வித தேர்தல் பிரசாரமும் அனுமதிக்கப்படாது என சமூக வலைத்தள பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில், கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்திய இணையத்தளம் மற்றும் தொலைபேசி கூட்டமைப்பு, ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப், கூகுள், டிக்டோக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 106வது பிரிவின்படி தாங்களாக முன்வந்து இந்த நடத்தை விதிமுறைகளை பின்பற்றவுள்ளதாகவும் சமூக வலைத்தள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை மீறி தேர்தல் பிரசாரம் செய்தால் அடுத்த 3 மணி நேரத்தில் அவை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படும் தேர்தல் செய்திகளை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இணையதள பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

அதேநேரம் விதிமுறைகளை மீறி தகவல்கள், ஒளிப்படங்கள், ஒலி மற்றும் காணொளி பதிவுகளை தேர்தல் நடத்தும் நாளிலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக பதிவிட்டால், அதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தடை சான்றிதழ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் அவை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7