(ஜெய்ஷிகன்,தர்சன்)

கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார,அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராஜா, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.ஜெகதீஸ்வரன் , பழைய மாணவர் சங்க செயலாளர் பு.சுதன் , பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்.
அமைச்சின் மேலதிக செயலாளர் க.மகேசனிடம் பாடசாலையின் சமூகம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் விஞ்ஞான ஆய்வு கூட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் நீண்ட கால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளருக்கு கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் கல்லூரியின் சமூகம் மற்றும் கல்லூரியின் அபிவிருத்திக் குழு ஆகியன இணைந்து மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தனர்.
இதேவேளை குறித்த கல்லூரி தேசிய பாடசாலை ஆக்கியமைக்கான பிரதி பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களின் பிரதியினை பெறும் விடயத்தினை விரைவுபடுத்தி தருவது தொடர்பான விண்ணப்பமும் மற்றும் கல்லூரியின் தேவைகள் அடங்கிய விண்ணப்பமும் அமைச்சின் செயலாளரிடம் கல்லூரி அபிவிருத்தி குழுவினால் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

