(ஜெ.ஜெய்ஸிகன்)
அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு 'சுப்ரீம் ஷெப்' இறுதிச் சுற்று போட்டியாளர்களின் சாதனைப் பயணம்
தலைப்பு:
சுழன்று வீசும் சூறாவளியாக வலம்வரவுள்ள 'சுப்ரீம் ஷெப்' மாபெரும் இறுதிப் போட்டி
சமையல்கலையில் புதிய வரலாறு படைக்கத் தயாராகும் 'சுப்ரீம் ஷெப்' மாபெரும் இறுதிப் போட்டி
அறிமுகம்: திறன் அபிவிருத்தி வாயிலாக இலங்கையின் இளைஞர் யுவதிகளை ஊக்கப்படுத்தல் மற்றும் வளர்ந்துவரும் சுற்றுலாத் தலங்களின் தனித்துவமான உணவு வகைகளை காட்சிப்படுத்தும் முகமாக ஒளிபரப்பாகும் 'சுப்ரீம் ஷெப்' சமையல்கலை ரியாலிட்டி நிகழ்ச்சியானது, 600 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இலங்கையர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திறமையான போட்டியாளர்கள், தமது திறமைகளை மென்மேலும் மெருகேற்றிக்கொள்வதன் மூலம் உணவகங்கள் மற்றும் விடுதிகளிலான சமையல்கலையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
உள்ளடக்கம்: பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் அம்பாறை, மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு திறமையான, இளம் போட்டியாளர்கள் 'சுப்ரீம் ஷெப்' சமையல்கலை ரியாலிட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர். மிகவும் எழுச்சிகரமாக இடம்பெற்றவுள்ள இந்த மாபெரும் இறுதிப் போட்டியானது, எதிர்வரும் சனிக்கிழமை பி.ப 5:00 மணிக்கு ITN மற்றும் வசந்தம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. இறுதிப் போட்டியின் வெற்றியாளர்கள் ளுமடைடள கழச ஐnஉடரளiஎந புசழறவா Pசழபசயஅ இன் அனுசரணையுடன் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆஸ்திரேலியாவுக்கு மேலதிகப் பயிற்சிகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், உள்நாட்டு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தனியிடத்தைப் பிடிப்பதற்கான அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமான ளுமடைடள கழச Skills for Inclusive Growth Program செயற்றிட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட 'சுப்ரீம் ஷெப்' சமையல் கலை ரியாலிட்டி நிகழ்ச்சியானது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இறுதிச் சுற்றுக்கு டிலோஜினி, மெலோனிக்கா, தர்ஷினி மற்றும் சுதர்ஷன் ஆகிய நான்கு திறமையான போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
புஷ்பராசா டிலோஜினி அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளராவர். இரண்டு சகோதரிகளைக் கொண்ட சிறிய குடும்பத்தைச் சேர்ந்த அவர் எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் ஒருவராக அறியப்படுகிறார். எதிர்பாராத விதமாக இடம்பெற்ற விபத்தொன்றில் தந்தை காயமடைந்ததன் காரணமாக, குடும்பப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை டிலோஜினிக்கு ஏற்பட்டது. எனினும் சமையல்கலையின் மேல் கொண்ட தீவிர ஆர்வத்தின் காரணமாக அனைத்து சவால்களுக்கும் அவர் வெற்றிகரமாக முகங்கொடுத்து வருகிறார். மனவுறுதியுடன் கடினமாக உழைக்கும் டிலோஜினி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வெற்றியடைவதற்கு எதிர்பார்க்கின்றார்.
, மெலோனிக்கா பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான அவர், இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் பற்றிக்குவேலையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கெடுப்பதற்காக குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டிய சூழலில், தனது அன்புக்குரியவர்களுக்காக போட்டியில் வெற்றிபெறுவதற்கு அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் எப்போதும் ஆர்வமாக இருக்கும் மெலோனிக்கா, அதன் மூலம் போட்டியின் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்க்க அவர் எதிர்பார்க்கிறார்.
தர்ஷினி வரதராஜன் திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளராவர். யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், யுத்த காலப்பகுதியில் கடும் இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வந்துள்ளார். யாழ்ப்பாணம் சங்கிலிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்விபயின்ற அவர், 2006 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைகளின் பின்னர் திருகோணமலையில் வசித்து வருகிறார். இளம் வயது முதல் சமையல்கலையில் ஆர்வம் காட்டி வந்த போதிலும் குடும்பத்தினரிடமிருந்து தர்ஷினிக்கு போதிய ஊக்கம் கிடைக்கப்பெறவில்லை. அவரது வாழ்க்கைத் துணைவரை சந்தித்ததன் பின்னர் இருவரும் சேர்ந்து சிறிய உணவகமொன்றை ஆரம்பித்தனர். அவரது உணவகம் உள்ளூரில் மிகவும் பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து, இப்போது அவரது பெற்றோரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் பணியாற்றுவதற்கு தர்ஷினிக்கு ஆதரவளித்து வருகின்றனர். 'சுப்ரீம் ஷெப்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது தனது வியாபாரத்தை மேலும் விருத்தி செய்வதற்கு அவர் எதிர்பார்க்கிறார்.
சுதர்ஷன் லக்மால் வீரசிங்க பொலன்னறுவையைச் சேர்ந்த சமையல்கலையில் ஆர்வமுள்ள துடிப்பான ஒரு இளைஞராவார். ஆரம்பத்தில் வெல்டிங் தொழில் மேற்கொண்டு வந்தாலும், சமையல் செய்வதிலும் சுயமாகப் புதியவற்றை உருவாக்குவதிலுமேயே அவர் அதிக ஆர்வம் காட்டிவந்தார். எதைப் பற்றியும் கவலைப்படாது வெல்டிங் தொழிலைக் கைவிட்டு 'சுப்ரீம் ஷெப்' நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் பலனை சுதர்ஷன் தற்போது அனுபவிக்கிறார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு மிகவும் பிடித்த சமையல்கலையை அவரது தொழில் துறையாக தெரிவு செய்துள்ளார். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் எப்போதும் ஆர்வமாக இருக்கும் சுதர்ஷன், அதன் மூலம் போட்டியின் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளார்.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல்,விருந்தோம்பல் துறையிலான பல்வேறு சமையல் நுணுக்கங்கள் மற்றும் சமையலறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு போட்டியாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில், நிகழ்ச்சியின் ஒரு சில பகுதிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதோடுஇ தனிப்பட்ட மற்றும் பொது சுகாதாரம், சிறிய மற்றும் பாரிய சமையலறை நடவடிக்கைகள், உணவு களஞ்சியப்படுத்தல் மற்றும் பல்வேறுவகையான உணவு செய்முறைகளை இலகுவாகச் செய்யும் முறை பற்றிய பலதரப்பட்ட பயிற்சிகளும் போட்டியாளர்களுக்கு கிடைக்கப்பெற்றன.
அத்தோடு, சமையல்கலை வல்லுனர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு செயல்முறை வகுப்புகள் இடம்பெற்றதோடு, போட்டியாளர்களுடன் அவர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். உள்ளூர் சமையல்கலை வல்லுனர்களுடன் உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய சமையல்கலை வல்லுனரான பீட்டர் குருவிட்ட அவர்களும் இதன் போது தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர். சர்வதேச விருதுகளைப் பெற்ற வைத்தியகலாநிதி பப்லிஸ் சில்வா மற்றும் ஜெராட் மெண்டிஸ் போன்ற சமையல்கலை வல்லுனர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பும் போட்டியாளர்களுக்கு கிடைக்கபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வெற்றியடைய பின்பற்றவேண்டிய சமையல்கலை அணுகுமுறைகளையும் இதன்போது அவர்கள் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்இ வாழ்க்கையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த போட்டியாளர்களைச் சந்தித்ததையிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடுஇ செவிப்புலன் குறைபாடுள்ள ஒரு போட்டியாளருக்கு நன்கொடையொன்றையும் வழங்கினார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வது பற்றிய தனது அனுபவங்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, புகழ்பெற்ற சொக்லெட் தயாரிப்பாளர் ஜெராட் மெண்டிஸ், நடிகர் தர்ஷன் தர்மராஜ் மற்றும் பாடகர்களான பாத்திய-சந்துஷ், இராஜ் போன்றோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆற்றுகைப்படுத்தல்கள் வாயிலாகப் போட்டியாளர்கள் தங்களது கற்பனைத் திறனை மென்மேலும் மெருகேற்றவும் சமையல் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பேற்படுகிறது. இறுதிச் சுற்றுக்குத் தெரிவான நான்கு போட்டியாளர்களும் தற்போது கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில் உள்வாரியான பயிற்சிகளில் கலந்துகொண்டு வருவதுடன் இ இறுதிப் போட்டியின் முதல் இரண்டு வெற்றியாளர்கள்இ ஆஸ்திரேலியாவில் 5 வாரங்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினையும் பெறுகின்றனர். முன்னதாக போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வுஏநுஊ இனால் அங்கீகரிக்கப்பட்ட மட்டக்களப்பிலுள்ள ஆஐயுNஐ பயிற்சி மையத்தில் ஆறு மாதகால Nஏஞ 4 நிலை கற்கைநெறியினை மேற்கொண்டு வருகின்றனர். கற்கைநெறியின் முடிவில் அவர்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளில் இணைவதற்கான உதவிகள் வழங்கப்படும்.
'சுப்ரீம் ஷெப்' சமையல்கலை ரியாலிட்டி நிகழ்ச்சின் மூலம், சமையல்கலையில் ஆர்வமும் திறமையுமுள்ள போட்டியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கவும், அவர்களது திறன் அபிவிருத்தியின் வாயிலாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையிலுள்ள தொழில் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை பணிக்கமர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமையல் துறையில் வேலைவாய்ப்புகளை தேடிகொள்வதற்கும், சுயமாக உணவு அல்லது குடிபானம் தொடர்பான வியாபார முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தேவையான முறையான பயிற்சியினை உள்ளூர் பயிற்றுனர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்வதற்கும் இதன்போது வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
ளு4ஐபு இயைந்த வளர்ச்சிக்கான திறன்கள் திட்டமானதுஇ அம்பாறைஇ மட்டக்களப்பு, பொலன்னறுவைஇ திருகோணமலை ஆகிய இலங்கையின் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மதிப்புச் சங்கிலியில் நிலையான வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் மற்றும் வியாபார அபிவிருத்திக்கு ஆதரவளித்து வருகின்றது. புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும்இ திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமான உதவிகளை வழங்குவதன் மூலம்இ குறிப்பாக, முறைசாரா துறைகளிலுள்ள வறிய மக்கள்இ பெண்கள் மற்றும் அங்கவீனமுற்ற நபர்கள் தமது வாழ்வாதாரத்தினை சுயமாகத் தேடிக்கொள்வதை அல்லது மேம்படுத்துவதை ளு4ஐபு உறுதிசெய்கின்றது.
இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாகஇ 600 போட்டியாளர்களிலிருந்து ஒரு மாவட்டத்திலிருந்து சராசரியாக 20 போட்டியாளர்கள் வீதம் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 80 பயிலுனர்கள் (இளைஞர் யுவதிகள், பெண்கள் மற்றும் அங்கவீனமான நபர்கள் அடங்கலாக) 'சுப்ரீம் ஷெப்' ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், பின்னர் தொடர்ச்சியாக 3 நாட்கள் இடம்பெற்ற திறன் தேர்வின் அடிப்படையில் 20 போட்டியாளர்கள் மாத்திரம் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்டனர். இறுதி 20 போட்டியாளர்கள் கொழும்பில் மூன்று வார கால அடிப்படை சமையலறைத் திறன்கள் பயிற்சி மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிப்பதிவுகளில் கலந்துகொண்டனர்.
