இது தொடர்பாக இன்று 01 திகதி ஆலய அன்னதான மடத்தின் அருகில் கூடிய தமிழ் இளைஞர்கள் பொது மக்கள் இந்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மீள அவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் வரை அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூடி இருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்டர் சபை பிரதிநிதிகள்
நேற்றைய தினம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வீதி அலங்காரம் செய்யும் குழுவினர் அன்னதான மடத்திற்கு முன் வைத்திருந்தனர்.
அந்த சிவலிங்கம் இனந்தெரியாதோரால் நேற்றிரவே உடைக்கப்பட்டுள்ளது.அது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தினரிடம் அனுமதி கோரி அதனை குறித்த இடத்தில் வைப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை தொலைநகல் மூலமாக அனுப்பி அனுமதிக்காக மக்கள் பிரதிநிதிகள் ஆலய நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.
இருப்பினும் எதிர்வரும் 10ம் திகதிவரை சிவலிங்கத்தை அவ்விடத்தில் வைப்பதற்கு பேச்சளவில் தொல் பொருள் திணைக்களம் அனுமதி வழங்கிய
போதும் அதற்கான எழுத்து மூல ஆவணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
(அ . அச்சுதன்)
