இதேவேளை, சிறியளவிலான இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் தெரிவிக்கப்படும் நிலையில், பாரியளவிலான பயிற்சிகளை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பட்ரிக் ஷானஹன் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கைங்-டோ இணக்கம் தெரிவித்துள்ளதாக, பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
பதற்றத்தை தனித்தல், பொருளாதார விடயங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் கொரிய தீபகற்பத்தில் இருந்து அணுவாயுதங்ளை ஒழித்தல் போன்ற காரணங்களுக்காக தென்கொரிய இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இருநாடுகளும் திருத்தப்பட்ட புதிய பயிற்சி திட்டங்களை வடிவமைக்க தீர்மானித்துள்ளது என்றும் பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.
