தெற்கு நைஜீரியாவின் நெம்பே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த போது குறித்த இடத்தில் கடமையாற்றிய 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எண்ணெய் களஞ்சியசாலையை கொண்டு நடாத்தும் நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக இதுவரையில் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எண்ணெய் கசிவின் போது பாரியளவில் தீ சுவாலை கிளம்பியதாகவும் எண்ணெய் வெளியேறுவதை கட்டுப்படுத்தி இருந்தால் விபத்து பாதிப்புகளை குறைத்திருக்கலாம் எனவும் சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஏற்படும் விபத்து காரணமாக நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளதாக கூறி அந்நாட்டில் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
