பிரித்தானிய மகாராணியை சந்திப்பதற்காக ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இளவரசர் ஹுசைன் மற்றும் ராணி ரனியா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு கடந்த 28ஆம் திகதி வருகை தந்திருந்தனர்.
அங்கு பிரித்தானிய மகாராணியும், இளவரசி அன்னேவும் கைலாகு கொடுத்து அவர்களை வரவேற்றனர். இந்த நிகழ்வின் போது, மாகாணராணியின் கையில் நீல நிறத்தில் பெரிய அடையாளம் காணப்படுகின்றமை குறித்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.
வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால், இணையதளவாசிகள் பலரும் அது என்னவென்று தெரியாமல் கலக்கத்தில் மகாராணி குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரபல ஆங்கில மாத இதழின் முகாமைத்துவ ஆசிரியர் ஜோ லிட்டில், “மகாராணி இரத்த சோகை நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்காரணமாக அவர் கையில் பேண்டேஜ் போட்டதன் காரணமாக கை உதா நிறத்தில் காயம் போன்று காணப்படுகின்றது“ என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல ஆங்கில மாத இதழின் முகாமைத்துவ ஆசிரியர் ஜோ லிட்டிலின் இந்த கருத்து பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
