புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “தீவிரவாதிகளை கைது செய்திருப்பதாக இம்ரான் கான் அரசு தெரிவிக்கின்றது. தீவிரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். அது எந்தவிதத்தில் முடக்கப்பட்டுள்ளது? முஷாரப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும்” எனக் கூறினார்.






