LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிவகுமாருக்கு பதிலாக புதிய வேட்பாளராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.

இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி கடந்த 20-ஆம் திகதி வெளியிட்டிருந்தது. 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிவகுமாருக்கு பதிலாக ஸ்ரீதர் போட்டியிடுவார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் குழுவின் பரிந்துரையின் படி இந்த மாற்றத்தை செய்துள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு தினங்களே மீதமுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7