
கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 993 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 94 சதவீதமானவர்கள் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்துக்களுக்கு அதிகரித்த போதைப்பொருள் பாவனையே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
