“ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்! அதன் கிளைகள் நீடிய வாழ்நாட்கள். (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டி விடுகின்றது! அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றி விடுகின்றது)
பொறுமையும் தன்னடக்கமும் :
நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது! சினத்தால் தடுமாறுவோர் வீழ்ச்சியடைவர். பொறுமையுள்ளோர் தக்க காலம் வரை அமைதி காப்பர்! பின்னர் மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும். அவர்கள் தக்க காலம் வரை நா காப்பர்! பலருடைய வாயும் அவர்களது அறிவுக் கூர்மையை எடுத்துரைக்கும்.”
எத்தவர் காக்கினும் நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்கிறது குறள். பொறுமை மிகவும் பெறுமதியானது! வலிமையானது. நம்மை அடக்கியாள அது நமக்கு வழிகாட்டும். நமக்கு முன் வந்து எதிர்த்து நிற்கும் எந்தப் பலசாலியையும் தோற்கடிக்க வல்ல வல்லமையை தந்து நிற்கும். அதனால்தான் பொறுத்தார் அரசாள்வார் என்கின்றோம். பொறுமை நம்மை நீங்கும்போது ஆத்திரமும், அவசரமும் நம்மில் குடி கொள்கின்றது. இதனால் நம் தெளிவும் விடைபெற்று விடுகின்றது. தெளிவில்லாத நிலையில் நாம் எடுக்கும் எந்த முடிவும் பிழைத்துப் போகவே செய்யும். அவசரமாகச் செயற்படவும், அதனால் நிதானம் தவறவும் செய்கின்றது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
