கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்டவேளை, ரயில் வருவதனை அவதானிக்காத அவர் ரயிலுடன் மோதி தூக்கியெறியப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிந்த ஒருவரின் தொலைபேசியில் இந்த விபத்துக் காணொளி பதிவாகியுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.





