
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தரப்பினர் நேற்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் குடியரசு நாடாகிய நிக்கராகுவாவின் ஜனாதிபதி சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீர்திருத்துவதில் பின்வாங்குவதாக தெரிவித்து மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின்போது, பலர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டின் அரசியல் குழப்பத்தை தீர்க்க எதிர்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக நிக்கராகுவா அரசாங்கம் கடந்த வாரம் உறுதியளித்திருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன்பதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்தரப்பினர் கோரியதைத் தொடர்ந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
