
போயிங் விமான சேவை தடை தொடர்ந்தும் நீடிக்குமானால் விமான நிறுவனங்கள் பொருளியல் ரீதியாகப் பாதிப்படையலாம் எனக் கருதப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் விமான சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை பாரியளவில் கொள்வனவு செய்துள்ளது. இந்நிலையில் போயிங் விமான சேவைகளை பல நாடுகள் நிறுத்தியுள்ளதோடு போயிங் விமான நிறுவனமும் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தியுள்ளது.
கென்யாவை நோக்கி புறப்பட்ட 157 பேருடன் சென்ற எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, போயிங் 737 MAX ரக விமான சேவைகள் உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் போயிங் ரக விமான சேவைகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
