அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சுகாஸ் ஆகியோரும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் தற்போது ஜெனீவாவில் களமிறங்கியுள்ளனர்.
எனினும், இவர்களிற்குள் ஒருங்கிணைந்த தன்மை ஏற்படாத நிலையில், தனித்தனியாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தரப்பினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஜெனீவாவிலுள்ள சில தனிநபர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து கலந்தரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனிடையே, இலங்கை அரசுடன் நெருக்கமாகவுள்ள உலகத் தமிழர் பேரவையினரும் இம்முறை ஜெனீவாவில் தமிழ் தரப்புக்களுடன் இணைந்துகொண்டு செயற்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தமிழர் பேரவையினரை விடுத்து ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில் எந்த சிக்கலுமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் சார்பாக தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
