ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின் போது நாளை(புதன்கிழமை) இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை முன்வைத்தன.
இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது.
இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்போது இரண்டு வருடங்களால் நீடிக்கப்பட்டது.
இதற்கமையே, இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் நாளை முழுமையான அறிக்கையொன்றை வௌியிடவுள்ளார்.
இந்த அறிக்கைக்கு அமைவாக, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
இதுகுறித்த மேலதிக தகவல்களுடன் ஜெனீவாவிலிருந்து இணைந்து கொள்கின்றார் ஆதவன் தொலைக்காட்சியின் இலங்கை விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி பன்னீர்செல்வம் சிறிகாந்த்.
