சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில்
முன்னெடுக்கப்பட்டது
சர்வதேச மட்டத்தில் பெண்களுக்கு எதிராக
நடைபெறும் வன்முறைகள் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்ற எழுச்சியோடு “நுண்கடன்களிலிருந்து மீண்டெழுவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில்
முன்னெடுக்கப்பட்டது
.
இன்று முன்னெடுக்கப்பட்ட
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டிலும்
பெண்களுக்கு எதிராக வீட்டுவன்முறைகள் பாலியல் பலாத்காரங்கள் ,சமூக ரீதியான ஒடுக்கு முறைகள்
பொருளாதார ரீதியான பின்னடைவுகள் ,பெண்களுக்கெதிரான
மனித உரிமை மீறல்கள் , நுண்கடனினால் நாளாந்தம் குடும்ப பிரச்சினைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது
இதிலிருந்து மீளுவதற்கான விழிப்புனர்வுகளை பெண்கள் அமைப்பானது செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.
இதன் ஒரு செயற்பாடாக 2019 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு காந்திபூங்கா முன்றலில்
கவனயீர்ப்பு போராட்டம் இன்று
முன்னெடுக்கப்பட்டது
தற்போதைய நிலையில் மாவட்டத்தில் அதிகமான பெண்கள் அதிக வட்டியுடனான
நுண் கடன்களை பெற்றுள்ளனர். .இதனால் கடன் சுமை அதிகரித்து குடும்ப
சீரழிவுகளும் பெண்களின் தற்கொலைகளும் அதிகரித்து
வருகின்றது .
இவற்றைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நுண்கடனினால்
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கும் இம்முறை 2019ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் மூலம்
நன்மை கிடைக்க ஆவண செய்யுமாறு கோரியும் இந்த
ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர் .
