சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி பதக்கம் பெற்றுக்கொண்ட
மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சி திட்டத்தினை
திறம்பட செயற்படுத்திக் கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களில் தேசிய ரீதியில்
ஐந்தாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் முதல்
இடத்தினையும் பெற்று ஜனாதிபதி
பதக்கத்தினை பெற்றுக்கொண்ட மாணவர்களையும் ,விருதுகள் பெற்றுக்கொள்ளும் வகையில்
மாணவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்களையும்
பாராட்டி விருதுகள் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின்
ஒழுங்கமைப்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அலுவலக உதவி பணிப்பாளர்
எஸ் கோகுலன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அதிதிகளாக வலயக்கல்விப்
பணிப்பாளர்கள் , பிரதி கல்விப் பணிப்பாளர்கள் , மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள்
,ஆசிரியர்கள் , ஜனாதிபதி பதக்கம் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள்
கலந்துகொண்டனர்
