தாக்குதலை நடத்திய நபர் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்திய காரில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின் மூலம், அது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கொக்மென் டானிஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெதர்லாந்தின் 4-ஆவது பெரிய நகரமான யூட்ரெக்ட்டில், கடந்த திங்கட்கிழமை ட்ராம் ஒன்றினுள் துப்பாக்கிதாரி ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். இதேவேளை, ஐவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.






