குறித்த விமானத்தை செலுத்திய 29 வயதான Yared Getachewவுக்கு போயிங் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடு தொகுதிக்கான (சிமுலேட்டர்) பயிற்சி அளிக்கப்படாத நிலையில் அவர் விமானத்தை செலுத்தியுள்ளார் என சக விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், Yared Getachew தமது விமான பயிற்சிகளை நிறைவு செய்து இரண்டு மாதங்களுக்கு பின்னரே போயிங் விமானத்தின் புதிய சிமுலேட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி கென்யா நோக்கி புறப்பட்ட போயிங் 737 மக்ஸ் 8 ரக விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியிருந்தது. கடந்த வருடமும் இதே வகை விமானம் இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளானது.
பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ்விரண்டு விமானத்தையும் செலுத்திய விமானிகள் அதனை கட்டுப்படுத்த போராடியுள்ளனர். போயிங் விமானத்தை செலுத்தும் பயிற்சிகளை எடுத்து வந்த 25 வயதான விமானி மொஹமட்டும் எத்தியோப்பிய விபத்தில் உயிரிழந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு நாடுகளும் போயிங் ரக விமான சேவைகளை நிறுத்தியுள்ளதோடு விபத்து தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






