நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து இராணுவத்தினரிடம் காணப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மெகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினால் நியூசிலாந்து சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






