அமெரிக்க மற்றும் வடகொரியாவுக்கிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,கொரிய தீபகற்பத்தில் இருந்து அணுவாயுதங்களை ஒழிக்க தங்க வாய்ப்பொன்று வழங்கப்பட்டிருந்தது. எனினும்
அந்த வாய்ப்பு சரிவர பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.
வடகொரியாவின் பிரதான Yongbyon அணுவாயுதத் தளத்தை தகர்க்க வடகொரிய இணங்கி இருந்தது. எனினும் பொருளாதார தடைகளை நீக்க முடியாதென தெரிவித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை குழப்பியுள்ளது. தலைவர் கிம் அணுவாயுத பரிசோதனை தொடர்பாக மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் இருந்து அணுவாயுதங்களை ஒழித்தல், கொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குதல் ஆகிய பிரதான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முறையே அமெரிக்காவும் வடகொரியாவும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. அந்த சந்திப்பு கடந்த மாத இறுதியில் வியட்நாமில் இடம்பெற்றது. இருப்பினும் இந்த சந்திப்பின்போது எந்த உடன்பாடுகளும் எட்டப்படவில்லை.
இதேவேளை இவ்விரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திரம் இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது என வடகொரியாவுக்கான சிறப்பு அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் பெய்கன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
