இஸ்தான்புல்லில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இது போன்ற தாக்குதல்களை உடனடியாக தடுக்க மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
