நியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மலேசிய தூதரகம் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.
காயமடைந்த நபர்களில் ஒருவருடைய நிலைமை, தற்போது சீராக இருப்பதாகவும், மற்றுமொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா கூறினார்.
இதற்கிடையே, நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் நடந்த தாக்குதலை, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர், ரெட்னோ மர்சூடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை விசேட பிரார்த்தனைக்குச் சென்ற குறித்த காயமடைந்த மலேசியர் மரணித்தது போல நடித்த நிலையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
