நெடுநல்வாடை திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குற்றம் செய்தவர்களை நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
அதைவிட அவ்வாறு கூறுபவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலைதான் உரிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத்தான் நெடுநல்வாடை செய்துள்ளது.
நெடுநல்வாடை வணிக ரீதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.






