(கந்தசாமி ஜெகதீஸ்வரன்)
வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மகளிர் தினம் 22.03.2019, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கும்புறுமூலையில் அமைந்துள்ள எம்.ஜே.எப் நிலைய கலை அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌந்தரராஜா சிவனேசராஜா, செயலக கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி. பத்மலோஜினி லிங்கேஸ்வரன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கோ.சிவாகரன், எம்.ஜே.எப் நிலையத்தின் முகாமையாளர் மார்க் பீட்டர்சன், வேள்ட்விஷன் நிறுவனப் பிரதநிதி, பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
'திறமையான பெண்ணொன்று அழகான உலகைப் படைக்கின்றாள்' என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற நிகழ்வில் சிறுவர் நடனம், வில்லுப்பாட்டு , கவிதை எனப் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.
கிராமசேகர் பிரிவு ரீதியாக சிறந்த பெண்கள் தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பொன்னாடை மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்ததுடன் அரங்க ஆற்றுகைகளை நிகழ்த்திய கலைஞர்களுக்கும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருஷியா நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.




























