சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களதடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.
இதன்காரணமாக அந்த அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பார்தீ பட்டேல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், தாஹீர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்தநிலையில் 71 என்ற வெற்றியிலக்கினை நோக்கி சென்னை அணி இன்னும் சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது






