LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

மைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு!

ஐக்கிய தேசிய முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுடன் ஒரு பரந்த கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணியில் 15 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்றாலும், பல சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

வரவு – செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் பின்னர் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார். அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அந்த கூட்டணியில் இணையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணிக்குள் செல்லமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.தே.மு. தேர்தல்களின் போது பல அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை அமைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7