
இதன்போது தமிழிசையின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தபின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல்அலுவலர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் களமிறங்க இருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில், தற்போது அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழிசை, இயக்குனராக இருக்கும் நிறுவனம் குறித்து தகவல் இல்லை எனவும், அவரது கணவரின் வருமானம் மற்றும் மகளின் மருத்துவர் பட்டம் குறித்து வேட்புமனுவில் தகவல் இல்லையென முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீள பரிசீலிக்கப்பட்டு தற்போது அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
