
இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் 26ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் நன்சி பெலோசி அறிவித்துள்ளார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் ட்ரம்ப் உறுதியாகவுள்ளார். அதேபோல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்கமுடியாது என்பதில் ஜனநாயகக் கட்சியினர் உறுதியாகவுள்ளனர்.
இதனால், அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின் தெற்கு பகுதியில் எல்லைச் சுவர் கட்டுவதற்கு 800 கோடி டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யும் அவசரநிலைப் பிரகடனத்தை கடந்த மாதம் டிரம்ப் பிறப்பித்திருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரித்து 182 உறுப்பினர்களும், எதிராக 245 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
இதனிடையே டிரம்பின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேல்சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
இதனால் கோபமடைந்த ட்ரம்ப், தனது ’வீட்டோ’ (சிறப்பு) அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் நேற்று கையொப்பமிட்டார்.
இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா அல்லது இரத்துச் செய்வதா? என்பது குறித்து வரும் 26 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
