
பிலிப்பைன்ஸின் சரங்காணி மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 69 கிலோமீற்றர் நிலப்பரப்பில் உணரப்பட்டுள்ளது என ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த நிலநடுக்கம் அருகில் இருந்த நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது. இதுவரையில் பாதிப்புகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனினும் பதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
