
அமெரிக்க-வடகொரிய பேச்சுவார்த்தைகள் முறியும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்த விடயத்துக்கு பதில் வழங்கும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இருவருக்கும் இடையே, கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாடு கருத்து வேறுபாடுகளுடன் முடிவடைந்தது.
அணுவாயுத ஒழிப்பு, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில், இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியாவின் முக்கிய அணுவாயுத நடவடிக்கை எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறுகிறது.
இதேவேளை அணுவாயுத பரிசோதனை அறிவிப்பை வடகொரியா மிக விரைவில் வெளியிடும் என வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் சொய் சுன்-ஹுய் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
