
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்ற முறைமையை உருவாக்கும் 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நிறைவேற்ற ஜே.வி.பி. தீவிர முயற்சி செய்கின்றது.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இதேவேளை, 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
