வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த அறிவித்தலை பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம் வழங்கியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் தவிர்ந்த ஏனைய தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாளை முதல் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரவுள்ளதாகவும் பிரதேச சபைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
