சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து அவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளை குறித்த பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை, பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முழுமையாக பூர்த்திசெய்ய மேலதிகமாக ஒரு வருடத்தை அவகாசமாக வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
