மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் உமரியா மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அண்மையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது படைகள் அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த அதிரடி தாக்குதல் தொடர்பாக இங்குள்ள எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துகின்றன.
மோடி தலைமையிலான ஆட்சியில்தான் நாட்டில் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தற்போது சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை ஆதரிக்க எந்த நாடும் தயாராக இல்லை. இது மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கிடைத்த வெற்றி.
நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த ராணுவத்தினரின் ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் திட்டம் மற்றும் டெல்லியில் தற்போது திறந்து வைக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னம் போன்றவற்றையும் இந்த ஆட்சிதான் நிறைவேற்றி வைத்தது.
இந்த நாட்டையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் எதிர்வரும் தேர்தல் அமைய வேண்டும். வயதான தலைவர்கள் மற்றும் ஒரு குடும்பத்தின் இளவரசர் இந்த நாட்டின் தலைவராகும் ஆசையை நீங்கள் (வாக்காளர்கள்) நிறைவேற்றக்கூடாது“ என தெரிவித்துள்ளார்.
