(பாண்டி)

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் , திட்டப்பணிப்பாளர் திரு ரோஹன கமகே , செயற்திட்டத்தின் பிராந்திய முகாமையாளர் திரு . தவலகள , அமைச்சின் பணிப்பாளர்களான திரு . வெல்லப்பிளி மற்றும் திரு. வஹாப்தீன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புன்னியமூர்த்தி, மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்கள் , மாவட்டத்தின் திட்ட பணிப்பாளர்கள் , கமநல சேவைகள் திணைக்கள பிரதிநிதிகள் , இலங்கை தேசிய நீர்வள வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், விவசாயம் , மீன் பிடி , மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளின் தொழில்சார் சங்கங்கள் , மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் , முதலீட்டாளர்கள் , சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இச்செயற்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலீட்டுக்கான மாணியங்கள் மற்றும் ஏனைய பங்களிப்புக்களும் வழங்கப்பட உள்ளது.
குறித்த செயற்திட்டமானது கிழக்கின் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களை மையப்படுத்தி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இராஜாங்க அமைச்சராக அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பொறுப்பேற்ற பிற்பாடு அமைச்சர் தயாகமகேயிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் தற்போது மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

