(பாண்டி)

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பால்ச்சேனை மகா வித்தியாலயம் மற்றும் முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூட கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பால்ச்சேனை மகா வித்தியாலய அதிபர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், வாகரை கோட்டக் கல்விப் பணிப்பாளர் , வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணா வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் தி.ரவிஇ கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம் , வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கட்டமானது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட கட்டடத்தில் நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், கணனி கூடம் என்பன அடங்குகின்றன.
