(பாண்டி)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூட கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இன்றையை நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுவதை கண்டேன். வடக்கு கிழக்கில் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். நமது பிரதேசத்தின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனது கல்விக் காலத்தில் பாடசாலைக் கீதம் இல்லை, கிராத் ஓதியதும் தேசிய கீதத்தினை அக்காலத்தில் தமிழில் பாடினோம். இந்த சந்தர்ப்பம் மீண்டும் இந்த அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமிழில் பாட முடியும் என்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதனையொட்டி எமது மாணவர்களுக்கு தேசிய கீதத்தினை கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. முன்னைய காலத்தில் இருப்பவர்களுக்கு தேசிய கீதம் தமிழில் படிப்பதற்கு பாடம். ஆனால் இப்போது உள்ள மாணவர்களுக்கு சிங்களத்திலும், தமிழிலும் படித்தற்கு தெரியாது என்று சொன்னால் தேசிய கீதத்திற்கு அநியாயம் செய்து விட முடியாது.
எமது நாட்டுப்பற்றை, இறையான்மையை ஓரளவுக்காவது வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தேசிய கீதம் படித்துக் கொள்ள வேண்டும். தேசிய கீதம் பாடும் போது எல்லோரும் பாடுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
