நேற்று மாலை திருக்கோவிலை சென்றடைந்த அவர் இன்று காலை அங்கிருந்து கல்முனை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்து வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை துவிச்சக்கர வண்டியில் சுற்றிவரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
திருக்கோவிலில் நேருபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரடிசாய் கருணாலய நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்ட அவருக்கு தேனீர் உபசாரங்கள் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கல்முனைக்கான அவரது பயணத்தை வழியனுப்பி வைத்தனர்.
தர்மலிங்கம் பிரதாபன் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும், லயன்களில் வாழும் மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வவுனியாவிலிருந்து துவிச்சக்கர வண்டி சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
இவரின் துவிச்சக்கர வண்டி பயணமானது 2,125 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளதுடன் இச்சுற்றுப் பயணமானது மார்ச் மாதம் 13ஆம் திகதி யாழ்.பல்கலைக் கழகத்தில் நிறைவு பெறவுள்ளதாக பிரதாபன் தெரிவித்துள்ளார்.
