யாழ்பாணம், பருத்தித்துறைப் பகுதியிலிருந்து படகில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு இலங்கை மீனவர்கள் இந்தியாவின் காரைக்காலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மீன் பிடிப் படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் சென்றதாக குறித்த மீனவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைகால் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற காவற்படையினர் பரிசோதனைக்குப் பின்னர் மீனவர்களை மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
