ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொழிற் சங்க செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியின் பிரச்சார செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு தொழில் வல்லுனர்களின் செயலாளராக துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் 47 பேரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
