தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதன்போது இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென குறித்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து மீட்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் விரைந்து செயற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
