உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம்.
பக்கர் பாபா நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 நாடாளுமன்றம், 8 சட்டசபைத் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வியடைந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்டுப்பணத்தைக் கூட பெறவில்லை.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் 17 ஆவது முறையாக போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்தும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
