நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யோர்க் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






