அந்தவகையில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி இத்திரைப்படம் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதில் நடிகை ஹன்சிகா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைப்பில், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே, இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன வெளிவந்து இரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






