இப்படம் அடுத்த மாதம் 19ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பேய் இசையுடன் வெளியிடப்பட்டுள்ள, த்ரில்லர் கலந்த ஆக்ஸன் காட்சிகளுடன் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்தே இதன் 3ஆம் பாகத்தை உருவாக்கியுள்ளனர்.
ராகவா லோறன்ஸூக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ் தமன் இசையமைத்துள்ளார்.






